இருளை நீக்கி மனித வாழ்வில் ஒளியேற்றுவதற்காக பூமியில் அவதரித்து இயேசு பாலகனின் பிறப்பினை நினைவு கூர்ந்து மலையகத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான ஹட்டன் திருச்சிலுவை தேவாலயத்தில் நத்தார் தின வழிபாடுகள் ஆலய பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் அவர்களின் தலைமையில் எளிமையான முறையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நத்தார் தின தேவ ஆராதனை இடம்பெற்றதுடன் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஆராதனையை தொடர்ந்து மக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டதுடன் கரோல் கீதங்களும் இசைக்கப்பட்டன.
மலைவாஞ்ஞன்