அம்பகஸ்தோவ, தங்கமுவ பகுதியில் தோட்டமொன்றில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பகஸ்தோவ, பஹல தங்கமுவ, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
அப்பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது தோட்டத்திற்கு அருகில் வனவிலங்குகளை வேட்டையாட அனுமதியின்றி சட்ட விரோதமான முறையில் இழுக்கப்பட்டுருந்த மின்சார வேலியில் சிக்கியதால் குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரியவந்தள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தோட்டத்தின் உரிமையாளர் என கூறப்படும் 35 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை அம்பகஸ்தோவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்
