இலங்கையில் வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 600 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. அதேபோல முட்டை விலையும் அதிகரித்துள்ளது. ஒரு முட்டையின் விலை 65 ரூபாவுக்கு மேல் காணப்படுகின்றது.
வெங்காயம் மற்றும் முட்டை விலைகள் இலங்கை அரசியல் களத்தையும் ஆக்கிரமித்துள்ளன. சமூகவலைத்தளங்களிலும் வெங்காய விலை பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் நத்தார் தினமான இன்று, நியாகம, கிரிதொல பகுதியில் நத்தார் தாத்தா வேடமிட்ட நபரொருவர், விசேட பரிசாக வெங்காயமும், முட்டையும் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பேசும் பொருளாகவும் மாறியது.
