சிவனொளிபாதமலை யாத்திரை இன்று முதல் ஆரம்பமாகியது.
பெல்மதுல்ல கல்பொத்தாவெல ஸ்ரீ பாத ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த சமணதேவர் சிலை, தெய்வ ஆபரணங்கள், புனித சின்னங்கள் நேற்று பவனியாக, சிவனொளிபாத மலைக்கு எடுத்து செல்லப்பட்டன.
ஹட்டன் நல்லத்தண்ணி ஊடாகவும், பலாங்கொடை ஊடாகவும், இரத்தினபுரி பலாபத்தன ஊடாகவும், குறுவிட்ட, எரன்ன பாதை ஊடாகவும் நான்கு வழிகளில் புனித சின்னங்கள் எடுத்து செல்லப்பட்டன.
சிவனொளிபாத மலையில் இன்று அதிகாலை தேவ விக்கிரங்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து யாத்திரை ஆரம்பமானது
