கொழும்பில் 700 மரங்கள் ஆபத்தான நிலையில்…!

கொழும்பு நகரில் சுமார் 700 மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன என்று கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.

இவற்றில் முழுமையாக அகற்ற வேண்டிய 200 மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும், இவற்றில் சில மரங்கள் 100 வருடங்களைவிட பழமையானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு நகரில் மரம் மீள் நடுகை வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

பஸ்ஸொன்றின்மீது பாரிய மரம் முறிந்து விழுந்து பயணிகள் பலியாகினர். இதனையடுத்து கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் வீதியோரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அடையாளம் காணும் பணி ஆரம்பமானது.

Related Articles

Latest Articles