சஜித் பிரேமதாச தலைமையில் மலரவுள்ள புதிய கூட்டணியில் டலஸ் அழகப்பெருமவுக்கு தேசிய அமைப்பாளர் பதவியை வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலித்துவருகின்றது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
மலரவுள்ள புதிய கூட்டணியில் டலஸ் அழகப்பெருமவுக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இதனை சஜித் தரப்பு ஏற்கவில்லை.
இதற்கிடையில் டலஸ் அணியில் உள்ள ஆறு எம்பிக்கள் சஜித்துடன் இணைய தீர்மானித்துள்ளனர்.
அவ்வாறு நடந்தால் அது எதிரணிகளுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் என்பதால் சுதந்திர மக்கள் சபையை முழுமையாக இணைத்துக்கொள்வதற்கு சஜித் தரப்பு தொடர்ந்து முயற்சித்துவருகின்றது.
இதன் ஓர் அங்கமாக தேசிய அமைப்பாளர் பதவியை டலசுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
