மலையக மறுமலர்ச்சிக்காக 2024 இல் புரட்சிகரமான திட்டங்கள்…!

மலையக மக்களின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல புரட்சிகரமான செயல் திட்டங்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் முன்னெடுத்துவருகின்றது என்று அந்நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கும் பெருந்தோட்ட தேசிய கல்வியல் நிலையத்திற்கும் இடையிலான சந்திப்பு நிதியத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா மற்றும் பணிப்பாளர்களும் கல்வியகத்தின் தலைவர் புஷ்பிக்க சமரக்கோன், பிரதம நிறைவேற்று அதிகாரி பிரசாத் தர்மசேன மற்றும் உயர் அதிகாரிகளும்  கலந்து கொண்டார்கள்.

பெருந்தோட்ட தொழில்துறையில் ஆரம்ப காலங்களில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் காணப்பட்ட போதிலும். தற்போது வெறும் 1,00,000 தொழிலாளர்களை காணப்படுகிறார்கள். இதற்கான பிரதான காரணமாகத் தொழில் துறையில் காணப்படும் வேதன குறைவு வசதி வாய்ப்புக்களின் தட்டுப்பாடு மற்றும் நவீனமடைந்து வரும் வேலை வாய்ப்புக்கு ஏற்ற தொழில்துறை மாற்றம் அடையாம் அது மிக முக்கியமாக தொழில் துறையில் இளம் தலைமுறையினர் கொண்டுள்ள புரிதல் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கண்ணியம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளதுனாலேயே ஏறக்குறைய கடந்த இரண்டு வருடங்களில் தொழில் துறைகளின் தொழிலாளர்களின் அளவு ஏறக்குறைய 60 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றவுடன் தொழிலாளர்களையும் மலையகத்தில் வாழும் அனைத்து மக்களையும் மேம்படுத்துவதற்காக பல முன்னேற்றகரமான திட்டங்களை முன்கொண்டு செல்கின்றார். அதனை அமல்படுத்தும் ஒரு முக்கிய அலகாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினை இன்னும் பல முன்னேற்றகரமான சேவைகளை மக்களுக்கு தொடர்ந்து வழங்க வழி நடத்தி செல்கிறேன். இந்த 2023 ஆம் ஆண்டில் 560 மில்லியனுக்கும் அதிகமான உட்கட்டமைப்பு வசதி வேலைத்திட்டங்களை மேற்கொண்டுளோம்.

மேலும் 2015ஆம்  ஆண்டு முதல் 2020 ஆண்டு வரையான காலப்பகுதிகளில்  கைவிடப்பட்ட அனைத்து வீட்டு திட்டங்களையும் சீர்செய்து மக்களின் பாவனைக்காக கையளிக்க உள்ளோம். அந்த வகையில் இவ்வாண்டு 426 வீடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளை நாம் கட்டமைத்து வருகிறோம்.

மேலும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் புதிய வாழ்வு வீடமைப்பு திட்டத்தில் 138 வீடுகளை இந்த பொருளாதார சவாலான காலப் பகுதியிலும் நிறைவு செய்து உள்ளோம். அதில் 30 வீடுகள் நானுஓயா கிளேரெண்டனில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாது.

பல்வேறு காரணிகளால் தடைபட்டிருந்த இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள 10,000 வீடு திட்டங்களையும் அமைச்சரின் தலைமையில் நாம் ஆரம்பிப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறோம். இதில் 1300 வீடுகளின் நிலங்களை விடுவித்து அளவை செய்து அதன் ஆரம்ப கட்ட பணிகளையும் நாம் ஆரம்பித்துள்ளோம். இந்த வீடுகள் ஒவ்வொன்றும் 10 பெர்சேஸ் நில அளவு  கொண்டதுடன் 28,00,000 ரூபா பெறுமதியான வீடுகளாகும். மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன. அதுமாத்திரமன்றி மலையகமெங்கும் உட்கட்டமைப்பு வசதிகள் தடை பெற்றிருந்த போதிலும் உட்கட்டமைப்பு வசதிகளை. நாம் மேற்கொண்டு வருகிறோம். அதில். குடிநீர் வசதி. பாடசாலை களுக்கான குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கொரோனா நோய்த் தொற்று மற்றும் பொருளாதார சவால்களையும் தாண்டி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பயன் அடையும் வகையில் 882 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்கான குடிநீர் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. மேலும் நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயன் அடையும் விதத்தில். 1752 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குடிநீர் திட்டங்கள் தற்சமயம்  அமைக்கப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி 50 மில்லியனுக்கும் அதிகமான செலவில் பாடசாலை மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளில் மலசலக்கூட வசதிகள் நடைபெற்று வருகின்றன.

சிறுவரக்ளின் வளர்ச்சி தொடரபாக ‘எம் சிறுவர்களுக்கான கனவுகள்’ செயற்த்திடத்தையும்  நாம் ஆரம்பித்தோம். இதில் உலக வங்கியின் நிதி உதவியுடன் 20 சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நவீனமயப்படுத்தி  சிறுவர் ஆரம்ப கல்வி நிலையங்களாக நிறுவி அவற்றை மக்கள் பாவனைக்காக கையளித்து உள்ளோம். மேலும் அமைச்சர் ஜீவன் அவர்களின் விசேட வேலைத்திட்டமாக இலவச காலை உணவு வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்திருந்தோம். இதில் நாள் ஒன்றுக்கு சிறுவர் அபிவிருத்தி நிலையங்களினூடாக இருபத்தோராயிரத்துக்கும் அதிகமான சிறுவர்களுக்கு இலவச காலை சத்துணவு  தோட்ட முகாமைத்துவம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் இணைந்து வழங்கி வந்தோம்.

அரசுக்கோ ஏனைய நிறுவனங்களுக்கோ சுமையை ஏற்படுத்தாமல் தனியார் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியுடன் மேலும் இத்திட்டத்தை விஸ்தரிக்க நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதுமாத்திரமன்றி 25 க்கும் அதிகமான அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புக்களுடன் இணைந்து தற்சார்பு பொருளாதாரம், கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்தல், மகளிர் அபிவிருத்தி, போன்ற உப வேலைத்திட்டங்களையும் நாம் மேற்கொண்டு வருகிறோம்.

அண்மையில். அமைச்சரின் தலைமையில். வரலாற்றில் முதல் முறையாக. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு என உருவாக்கப்பட்ட ஜீவனசக்தி காப்புறுதித் திட்டத்தை மக்களுக்காக அறிமுகப்படுத்தினோம். மேலும் மக்களின் போசாக்கு குறைப்பாடு கருத்தில்கொண்டு அவர்களுடைய போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்காக செரண்டிப் நிறுவனத்துடன் இணைந்து பெருந்தோட்டத் துறைக்கு என விசேடமாக தயாரிக்கப்பட்ட சத்தூட்டப்பட்ட கோதுமை மாவையும் அறிமுகம் செய்துள்ளோம்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் 2024ஆம் ஆண்டு ‘மாற்றத்தை நோக்கிய மலையகம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் பல முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை  பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மேற்கொள்ளும் என நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles