இந்தியா, தமிழகத்தில் நடைபெற்ற 5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற தமது பகுதி வீர, வீராங்கனைகள் மூவருக்கு கலஹாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
கலஹா நகர ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் இருந்து , ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வரை ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
குறித்த கல்லூரியின் பழைய மாணவியான E. நிமேஷா ஒரு தங்கம் மற்றும் இரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். அத்துடன், அக்கல்லூரி மாணவரான V. யாதேஷ் இரு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார்.

அத்துடன், மலைமகள் இந்து கல்லூரி மாணவியான M. இந்துஷா 3 வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். அவர்களுக்கே பழைய மாணவர்கள், கல்வி சமுகத்தினர், ஊர் மக்கள் என பலரும் பங்கேற்று வரவேற்பளித்துள்ளனர்.
5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் அகில இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் சார்பில் பங்கேற்றிருந்த மலையக வீர, வீராங்களைகள் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 42 பதக்கங்களை வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சிலம்பம் சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட 5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள், தமிழ் நாடு, நாகர்கோவிலில் டிசம்பர் 26 முதல் 29 வரை நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கையில் இருந்து பங்கேற்ற வீர, வீராங்களைகளில் மலையகத்தை சேர்ந்தவர்களே முழுமையாக உள்ளடங்கி இருந்தனர்.
குழுவில் இடம்பெற்றிருந்த 4 பெண்களும் மாணவிகளாவர். இருவர் கண்டி, கலஹா. ஏனைய இருவர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்கள்.

பதக்க விபரம் –
தங்கள் – 02
வெள்ளி -32
வெண்கலம் – 08
பயிற்றுவிப்பாளர்கள் விபரம் –
1. தினேஷ்குமார் – பத்தனை
2. திருச்செல்வம் – தலவாக்கலை
3. கொட்டகலை – ராஜேந்திரன்
அகில இலங்கை சிலம்ப சம்மேளனத்தின் தலைவராக திருச்செல்வமும், பொதுச்செயலாளராக தினேஷ் குமாரும் செயற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கங்களின் அடிப்படையில் இந்தியா முதலிடத்தையும், இலங்கை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
தகவல் – சிது, கலஹா










