பதுளை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
36, 42, 57, 63 மற்றும் 67 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்கள் பதுளை நெலும்கம மற்றும் பஹல்கம பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.
பதுளை நகரை சுழவுள்ள பகுதிகளில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு, கைது இடம்பெற்றுள்ளது.
பதுளை அந்தெனிய பாலம் மற்றும் கலன் சந்திக்கு அருகில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடம் 5310 மற்றும் 5480 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பதுலுபிட்டி, கைலாகொட மற்றும் நெலும் கமடி ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் 120, 50 மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பிரதேச குற்றப் புலனாய்வுப் பொறுப்பு அதிகாரி பி.ஓ.பி.பிரியந்த சர்மிந்த ஆகியோரின் பணிப்புரையின் பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
