“வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்க விவசாயத்தையே நம்புகிறோம்” –

” வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொங்கல் தின வாழ்த்து செய்தி வருமாறு,

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும்.

வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல் திருநாள் குறிக்கிறது. தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் சூரியன் வடக்குக்கு நகரும்போது, நிகழும் மங்களகரமான அறுவடைக் காலத்தின் ஆரம்பமாக தைத்திருநாள் அமைந்துள்ளது.

இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வருடத்தின் முதலாவது அறுவடைக்காக தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அறுவடையின் செழுமைக்கு வித்திட்ட இயற்கை, கால்நடைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் மனதார நன்றி கூறுவதே பண்டிகையின் நோக்கமாகும்.

இரண்டு வருடங்களாக விவசாயிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் நாடு வெற்றிப் பாதைக்குள் பிரவேசிக்கும் வேளையில் தைப்பொங்கல் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுகிறது.

வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம்.

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாடளாவிய ரீதியில் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. அந்த அனைத்து பணிகளும் வெற்றியளிக்க இம்முறை தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.

அதேபோல் தைப்பொங்கல் நமக்கு சகவாழ்வையும் மதிப்பையும் போதிக்கிறது. அதற்கமைய நாட்டின் எதிர்காலத்துக்கான புதிய எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கு ஒருதாய் மக்களாக முன்னேற்றம் அடைய வேண்டும் என அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளும் அதேநேரம், தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

…….

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

இந்து கலாசாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் தேசிய பண்டிகையான ‘தைப்பொங்கல்’, விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைதி, ஒற்றுமை மற்றும் அன்பு ஆகிய அடிப்படைப் பெறுமானங்களை உள்ளடக்கியுள்ளது.

இயற்கையோடு இயைந்த பாரம்பரிய வாழ்வொழுங்கின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ் விவசாயிகள், சிறந்த விளைச்சலை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த அறுவடைத் திருவிழா தேசத்தின் உயிர்நாடியின் பிரதிபலிப்பாக அமையும்.

இது, தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய மறுமலர்ச்சி என்ற எண்ணக்கருவுக்கு சிறந்ததோர் உந்து சக்தியாகும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வளம் நிறைந்த புத்தாண்டின் விடியலைக் குறிக்கும் தைத் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு, எனது நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

……..

எதிர்க்கட்சி தலைவரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

இலங்கைவாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்து மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் முகமாக பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாள் தொடர்பில் வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

மானுட வளர்ச்சியின் தொடக்கத்தில் இருந்து நாம் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறோம். உலகிற்கு உயிர் கொடுக்கும் சூரிய பகவானை வழிபடுவது பண்டைய காலத்திலிருந்தே நடந்து வருகிறது. தைப்பொங்கல் பண்டிகை இந்த சூரிய பகவான் மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கை மற்றும் மரியாதைக்காக நடத்தப்படும் ஒரு சிறப்பு விழாவாக இந்த தைப்பொங்கள் திருவிழாவை சுட்டிக்காட்டலாம்.

தைப்பொங்கல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்புக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சிறந்த நிகழ்வாகும், மேலும் இந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்ல எண்ணங்களைச் சேர்க்கும் பண்டிகை என்றும் அழைக்கலாம்.

புதிய அறுவடையை சூரிய பகவானுக்கு படைத்து அடுத்து வரும் ஆண்டில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர வேண்டப்படுகின்றது. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்மிக்க ஆண்டின் முடிவில் இன்னும் பல சவால்களுடன் இன்னுமொரு ஆண்டிற்குள் நுழைந்துள்ளோம்.

இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்களை இந்தத் தைப்பொங்கள் தினத்தில் பெற்று உலகின் முதல்தர நாடாக மாறுவதற்கான புதிய பயணத்திலும் புதிய மாற்றத்திலும் இணைந்து கொள்ளுமாறு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களை இத்தருணத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles