இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி – 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இலங்கை ரி – 20 அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமையின்கீழ் எதிர்கொண்ட முதல் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது.
இதனால் 1-1 என்ற அடிப்படையில் ரி – 20 தொடர் சமநிலையில் உள்ளது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியம்.
சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் ரி – 20 தொடரையும் கைப்பற்றும்.