பாதாள குழு உறுப்பினரான ‘ஹரக்கட்டா’ என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவுடன், தொலைபேசி தொடர்பை ஏற்படுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, வெல்லம்பிட்டிய ஹல்முல்லை பகுதியில் வைத்தே 27 வயதான குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது சிறையில் உள்ள தனது உறவினர் ஒருவருக்கு, தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டையை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.










