பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலி ஹெவ்லோக் பகுதியில் உள்ள வாகனத் திரிப்பிடத்தில் வைத்தே குறித்த ஜீப் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறையில் இருந்து வந்த விசேட பொலிஸ் அதிகாரிகளால் குறித்த ஜீப் கைப்பற்றப்பட்டுள்ளது.
போலி இலக்க தகட்டை பயன்படுத்தியே வாகனம் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே, அதன் உண்மையான உரிமையாளரை கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
அபே ஜனபலவேகய கட்சியின் தலைவர் உட்பட ஐவர் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
