சந்தையில் மீண்டும் ‘கெத்து காட்டும்’ கரட் விலை!

சந்தையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வீழ்ச்சியடைந்து இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் விலை, மீண்டும் அதிகரித்துள்ளது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் புதன் கிழமை (24) வெளியிடப்பட்ட விலை பட்டியலிலேயே குறித்த விலை நிலவரம் வெளியாகி உள்ளது.

கடந்த காலங்களில் 2 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை, கடந்த மூன்று நாட்களுக்கு முன் கிலோவுக்கு 900 ரூபாயாக விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்டு , மொத்த விற்பனை விலையாக 950 ரூபாவுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறு வீழ்ச்சியடைந்து இருந்த கரட்டின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

கரட் ஒரு கிலோ கிராம் விவசாயிகளிடம் ஆயிரத்து 200 ரூபா முதல் ஆயிரத்து 250 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்பட்டு, ஆயிரத்து 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுவரெலியா மத்திய பொருளாதார நிலைய காரியாலயம் தெரிவித்துள்ளது.

ஏனைய மரக்கறி வகைகளின் விலைகள்……..

Related Articles

Latest Articles