மக்கள் என்னை ‘தங்கம்’ என அழைப்பது ஏன்?

தனக்கு ஏன் தங்கம் என பெயர் வந்தது என்பது தொடர்பான இரகசியத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தனக்கு தங்கம் என பெயர் வந்த கதையை விவரித்தார்.

“ நாம் பிறக்கும்போது செல்லப் பெயரும் வைப்பார்கள், அந்தவகையில் எனக்கு ‘ரத்தராங்’ (தங்கம்) என பெயர் வைக்கப்பட்டது. ஊர் மக்களும் இப்படிதான் அழைப்பார்கள்.

நிலைமை இப்படி இருக்க நான் அரசியலுக்கு வந்தபின்னர், அந்த பெயருக்கான அர்த்தத்தையே மாற்றிவிட்டனர், தங்க சங்கிலி அறுத்ததால்தான் தங்கம் என பெயர் வந்தது என சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இது அப்பட்டமான பொய்.” – என்றும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles