கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ‘ஒன்லைன்’ சட்டமூலம் நிறைவேற்றம்!

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீது நாடாளுமன்றத்தில் நேற்றும், இன்றும் விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின்பின்னர் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்பின்னர் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, அவையும் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து சட்டமூலம் திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சபாநாயகர் அறிவித்தார்.

இச்சட்டமூலத்துக்கு எதிரணியினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles