ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் இரத்து!

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்போது அச்சட்டம் இரத்து செய்யப்படும் என்று –  அக்கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் சட்டத்தரணியுமான அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

“ ஊழல்களை அம்பலப்படுத்தும், குற்றங்களை வெளிப்படுத்தும் நபர்களை இலக்கு வைத்தும், அவர்களின் அரசியல் செயற்பாடுகளை மட்டுப்படுத்தும் நோக்கிலுமே நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இது ஏற்புடைய சட்டமூலம் அல்ல என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், தனது இருப்பைக்காப்பதற்கான அரசின் நகர்வாகவே இது அமைந்துள்ளது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், (இன்று நிறைவேற்றப்பட்டது) எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் முதல் வேலையாக அச்சட்டம் மீளப்பெறப்படும்.” – எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.

அதேவேளை, நிகழ்நிலைக் காப்புச்சட்டமூலத்துக்கு பதிலாக ஜனநாயக அடிப்படையிலான சட்டம் தமது ஆட்சியில் கொண்டுவரப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி இன்று அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles