பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலைச்சம்பவத்துக்கு இவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 மற்றும் 30 வயதுகளுடைய இரு இளைஞர்களே, காலி, வஞ்சாவல என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொலைசெய்யப்பட்டவர்கள் பயணித்த டிபென்டர் வாகனம் தொடர்பில் இவர்கள் உளவு பார்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
