இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக குறித்த போட்டி நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க இரட்டை சதமடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.