சஜித்தின் தொகுதி அமைப்பாளர் ரணிலுடன் சங்கமம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை, கட்டுகம்பொல தொகுதி அமைப்பாளரான அசங்க பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இன்று (13) இணைந்துள்ளார்.

வடமேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான அசங்க பெரேரா, முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் மகனாவார்.

காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியில் தவிசாளர் பதவியை வகித்தவர். நல்லாட்சியின்போது அமைச்சு பதவியையும் வகித்தார். கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குருணாகல் சென்றிருந்தபோது, காமினி ஜயவிக்கிரம பெரேராவை சந்திக்க அவரின் வீட்டுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே காமினி ஜயவிக்கிரம பெரேராவின் மகன், அசங்க பெரேரா ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி, மீண்டும் ஐ.தே.கவுக்குள் சென்றுள்ளார்.

Related Articles

Latest Articles