18 போலி நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் வீரகெட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்ததெமலிய, திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 24 மற்றும் 39 வயதுகளுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபா போலி நோட்டுக்கள் 2 , ஆயிரம் ரூபா போலி நோட்டுக்கள் 10 மற்றும் 500 ரூபா ; போலி நோட்டுக்கள் 6 கைப்பற்றப்பட்டுள்ளன. இரு சந்தேக நபர்களும் உறவினர்களாவர். இச்சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
