ஹோட்டல் உரிமையாளர்மீது துப்பாக்கிச்சூடு!

கொழும்பு , முகத்துவாரம் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு அருகில் நேற்றிரவு(13) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் வந்தவர்களால் ரிவோல்வர் ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த உணவகத்தில் முகாமையாளராக பணியாற்றிய 51 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.

அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles