கந்தப்பளையில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அலுவலருக்கு ஏழு வருடங்கள் கடூழியச் சிறை!

திருமணம் ஆகாத 35 வயதுடைய பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிர யோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணத் துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 லட்சம் ரூபா நஷ்ட ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும் என நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய நேற்றுப் பகல் வழங்கினார்.

கந்தப்பளை ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தி யோகஸ்தராகக் கடமையாற்றிய லக்ஷ்மன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் கடமை நேரத்தில் 35 வயது டைய திருமணமாகாத பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட் படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக பொலிஸ் உத்தி யோகஸ்தருக்கு எதிராக கடந்த 2019 ஆண்டு நுவரெலியா மேல் நீதி மன் றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஐந்து வருடங்களாக விசா ரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக் கின் சாட்சியங்களின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்தரான லக்ஷ் மன் சாலிய பண்டார வீரசிங்க நுவரெ லியா மேல் நீதி மன்றத்தில் குற்றவாளி யாக இனங்காணப்பட்டு அவருக்கான தண்டனைத் தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதபதி விராஜ் வீரசூரிய நேற்று வழங் கினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட் சம் ரூபா நஷ்டிட்டுத் தொகை வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருடச் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Articles

Latest Articles