இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது.
இரவு 7 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க தலைமை தாங்குகின்றார்.
இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இலங்கை அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
3 போட்டிகளைக்கொண்ட ரி – 20 தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. 3ஆவது ரி – 20 போட்டி 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.