சர்வதேச ரி – 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரராக இடம்பிடித்துள்ளார் வனிந்து ஹசரங்க.
ஆப்காஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ரி – 20 போட்டியின்போதே அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி, 19 ஓட்டங்களுக்கு இரு விக்கெட்டுகளை வனிந்து கைப்பற்றினார்.
ரி – 20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார். இவர் 63 போட்டிகளில் கலந்து கொண்டு இந்த விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 53 போட்டிகளில் நூறு விக்கெட்டுக்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.
இதற்கு முன்னர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க ரி – 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நேற்றைய போட்டியில் இலங்கை அணி 72 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.