2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை நடைபெறும் உறுதியான காலப்பகுதி தொடர்பான அறிவித்தல் பரீட்சைகள் திணைக்களத்தால் அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
பரீட்சைக்கு தயாராவதற்கு போதிய கால அவகாசம் இன்மையால் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், பாடசாலை நேர அட்டவணைக்கு பாதகம் ஏற்படாத வகையில் பரீட்சை திகதியை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பிரதிநிதிகளும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, புதிய திகதி விவரம் அடுத்தவாரம் அறிவிக்கப்படவுள்ளது . மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் திகதி நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
