2021 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளபடவுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
இணையவழி ஊடாக விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
பாடசாலைகள் மீள எப்போது ஆரம்பமாகும்?
அதேவேளை, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.










