உரிய நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்!

“சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் உரிய நேரத்தில் வரும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அனைத்து எதிரணிகளுடனும் கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் இன்று (28) கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உரிமை மீறல், பாரபட்சம் உட்பட சில காரணங்களை அடிப்படையாகக்கொண்டே பிரேரணை முன்வைப்பது குறித்து கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் தேவைக்கேற்ப பிரேரணைகளை கொண்டுவருவதற்கு தாம் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles