ஜனவரி 1 முதல் 25 வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு 2 லட்சத்து 23 ஆயிரத்து 645 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 15 ஆம் திகதி மாத்திரம் 10 ஆயிரத்து 483 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஜனவரி 1 முதல் 25 வரை இந்தியாவில் இருந்து 41 ஆயிரத்து 603 பேரும், பிரிட்டனில் இருந்து 23 ஆயிரத்து 329 பேரும், ரஷ்யாவில் இருந்து 22 ஆயிரத்து 876 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.
கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
