​வெல்லவாய – எல்ல பிரதான வீதியில் விபத்து: நால்வர் காயம்!

இரா. சுரேஷ்குமார் (தெமோதரை நிருபர்)

 

வெல்லவாய – எல்ல பிரதான வீதியின் 09ஆம் கட்டை தபால் நிலையத்திற்கு அருகில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் காயமடைந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் பயணித்த வாகனம் வீதியோரத்தில் இருந்த மாமரம் ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

​காயமடைந்தவர்களில் இரு ஆண்களும் இரு பெண்களும் அடங்குவர். இவர்கள் நால்வரும் உடனடியாக வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles