யாழ்.மீனவர்மீது தமிழகத்தில் தாக்குதல்: நாமல் கொதிப்பு!

யாழ்.மீனவர்மீது தமிழகத்தில் தாக்குதல்: நாமல் கொதிப்பு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழ்நாட்டின் சில மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஷ தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், ” எமது மீனவர்களில் ஒருவரை தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் மிகவும் கவலைக்குரியது.

இத்தகைய வன்முறைகள் முற்றிலும் ஏற்க முடியாதவை.

அரசு உடனடியாக தலையிட்டு, அவரின் உடனடி பாதுகாப்பை உறுதி செய்து, அவர் விரைவாகவும் பாதுகாப்பாகவும் நாட்டிற்கு திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் வலியுறுத்துகிறேன்.

இந்தச் சம்பவம், வட மாகாணத்தைச் சேர்ந்த எங்கள் மீனவர்களை பாதுகாக்க வலுவான எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதில் திறமையாக இருந்தாலும், தமிழ்நாடு நிலப்பரப்பில், அதுவும் அங்குள்ள பொலிஸாரின் முன்னிலையில் எங்கள் மீனவர்கள் தாக்கப்படும்போது அமைதியாக இருப்பது கவலைக்குரியது.” என நாமல் ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles