அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலியாவின் புதிய தூதுவராக பாதுகாப்பு செயலாளர் கிரேக் மோரியார்டி Greg Moriarty நியமிக்கப்படவுள்ளார்.
இது தொடர்பான அறிவித்தலை பிரதமர் அந்தோனி அல்பானீஸி Anthony Albanese
இன்று வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான பரிந்துரை ஆளுநர் நாயகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் கூறினார்.
ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதில் மோரிpயார்டி முக்கிய பங்கு வகிப்பார்.” என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
2017 ஆம் ஆண்டு முதல் இவர் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிவந்தார். சர்வதேசக் கொள்கை தொடர்பில் அனுபவம் உள்ள் மூத்த அரச அதிகாரியாவார்.
2010 முதல் 2014 வரை இந்தோனியாவுக்கான தூதுவராகவும், 2005 முதல் 2008 வரை ஈரானுக்கான தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதுவராக பதவி வகித்த கெவின் ரூட், ஓராண்டுக்கு முன்னதாகவே பதவி விலகும் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள்மீது ட்ரம்ப் வரிப்போரை தொடுத்துள்ளார்.
அதேபோல ஆக்கஸ் பாதுகாப்பு கூட்டணி விவகாரமும் இழுபறியில் உள்ளது. எனவேதான் அனுபவம்மிக்க அதிகாரியை வாஷிங்டனுக்கான தூதுவராக கன்பரா களமிறக்கியுள்ளது.
