பீச் வொலிபோல்: நுவரெலியா மாவட்ட மகளிர் அணி சாம்பியன் மகுடம் வென்று சாதனை

விளையாட்டுத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் 50ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியின் மாகாண மட்ட பீச் வொலிபால் (Beach Volleyball) போட்டியில், நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்று தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நோர்வுட் தொண்டமான் விளையாட்டரங்கில் பயிற்சி பெறும் மலையகத்தைச் சேர்ந்த காவியா மற்றும் யுகாஷினி ஆகிய வீராங்கனைகளே நுவரெலியா மாவட்டத்திற்கு இவெற்றியைப் பெற்றுத் தந்துள்ளனர்.

பயிற்சியாளர் பெரியதம்பி விக்னேஸ்வரனின் தீவிர பயிற்சியின் கீழேயே இவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். பீச் வொலிபால் போட்டியில் ஒரு அணியில் இரு வீரர்கள் மட்டுமே இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles