இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்காது என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
லங்கா ஐஓசி நிறுவனம், பெற்றோல் விலையை நேற்று முதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், லங்கா ஐஓசி நிறுவனத்துக்கு இவ்வாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ள முடியுமா, அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.