‘COP 28’ – மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதியுடன் இ.தொ.கா தவிசாளர் ரமேசும் டுபாய் பயணம்!

ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் குழுவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இடம்பெற்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30) முதல் டிசம்பர் 12 வரை அரச தலைவர்கள், அரச மற்றும்-தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்கேற்புடன் டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்கும் இலங்கை குழு இன்று டுபாய் நோக்கி புறப்பட்டது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராமேஷ்வரனும் பயணமானார்.

Related Articles

Latest Articles