மாணவர்கள் சிலரிடையே டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து, மொறட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் நேற்று நடத்தப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் 61 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதமே அதிகளவான நோயாளிகள் பதிவானார்கள்.
