#FAKENEWS ஊடகப் பொறுப்பாளர் பதவி ஆனந்தகுமாருக்கு வழங்கவில்லை : ருவான் விஜேவர்தன

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ஆந்தகுமாருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் பதவி வழங்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
”ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளராக ஆனந்தகுமார் நியமனம்” என்ற ஆனந்தகுமாரின் ஊடகப் பிரிவினால் ”குருவி” செய்திப் பிரிவிற்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த செய்தி எமது தளத்திலும் பதிவேற்றப்பட்டது.
இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் இருந்து எமது செய்தி குறித்து கேட்டிருந்தனர்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு நியமனம் குறித்து வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்த மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரைத் தொடர்புகொண்டு கேட்டுபோது, இவ்வாறு ஊடகம் சம்பந்தமாக எந்தவொரு நியமனமும் வழங்கவில்லை என்று என்று விளக்கமளித்தார்.
ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு 20 பேர் கொண்ட குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் குழுவில் ஆனந்தகுமாரும் உள்ளடக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு கட்சியின் ஊடகப் பிரிவு சார் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.” ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

Related Articles

Latest Articles