ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘துரந்தர்’. இதில், சஞ்சய் தத், மாதவன், அக் ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் உள்பட பலர் நடித்துள்ளனர். ‘உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ என்ற படத்தை இயக்கிய ஆதித்யா தார் இயக்கி உள்ளார். ‘ஸ்பை த்ரில்லர்’ படமான இது, உளவு அதிகாரியை பற்றிய கதையைக் கொண்டது.
இந்த மூன்றரை மணி நேரப் படம் வெளியான நாளிலிருந்து அதிக வசூல் ஈட்டி வந்தது. இந்நிலையில் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்ளது. ‘பாகுபலி 2’, ‘கேஜிஎப் 2’, ‘புஷ்பா 2’ படங்களுக்குப் பிறகு இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலித்த நான்காவது படமாக ‘துரந்தர்’ இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு டிச.5-ம் தேதி வெளியான இப்படம் இப்போது வரை இந்தியாவில் ரூ.1,002 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இதற்கு முன், ‘புஷ்பா 2’ ரூ.1,471 கோடியும் ‘பாகுபலி 2’ ரூ.1417 கோடியும், ‘கேஜிஎஃப் 2’ ரூ.1,001 கோடியும் இந்தியாவில் மட்டும் வசூல் ஈட்டிஉள்ளன.
