2013ஆம் ஆண்டின் நிதி நிறுவனங்களின் (கட்டமைப்பு மாற்றங்கள்) வழிகாட்டுதல்கள் எண். 1இன் படி டிசம்பர் 8, 2021 அன்று HNB FINANCE மற்றும் Prime Financeஇன் இணைதல் மற்றும் இணைக்கப்பட்ட நிதி நிறுவனத்தை HNB Financial Finance PLCஆக மாற்றுவதற்கான இலங்கை மத்திய வங்கியின் கோரிக்கையை மத்திய வங்கியின் நாணயச் சபை அங்கீகரித்துள்ளது.
நிதித்துறையில் முன்னணி நிறுவனங்களான HNB FINANCE மற்றும் Prime Finance வங்கி ஆகியவை நிதித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான நிதிச் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் இந்த இணைவின் மூலம், HNB FINANCEஆனது இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் மேலும் பலதரப்பட்ட நிதிச் சேவைகளை வழங்க எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிகரமான இணைவின் மூலம், HNB FINANCE பிரைம் குழுமத்துடனான அதன் தற்போதைய உறவை வலுப்படுத்த முடிந்துள்ளதுடன், காணி கட்டட விற்பனை தொடர்பான நிதித் துறையில் பிரைம் குழுமம் அறிவையும் நிபுணத்துவத்தையும் பெறுவதற்கான வாய்ப்பையும் இது வழங்கும்.
இணைவின் ஆரம்ப கட்டங்களில் 87.27 சதவீத Prime Finance பங்குகளை HNB Finance கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, பிரைம் ஃபைனான்ஸ் கட்டுப்பாட்டை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து HNB Finance தனது பங்குகளை 9.37% அதிகரித்தது.
அத்துடன் 0.51% பங்குகளை பங்குச் சந்தையிலிருந்து HNB Finance வாங்கியதன் மூலம் HNB Finance, பிரைம் ஃபைனான்ஸின் 97.15% பங்குகளை தனதாக்கிக் கொண்டதுடன், அதன்படி, மீதமுள்ள 2.85% பங்குகள் ஏனைய பங்குதாரர்களிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கையகப்படுத்தல் மூலம் முன்னரை விட அதிகமான கிளைகளின் ஊடாக தமது சேவைகளை மேற்கொள்வதற்கு HNB Finance நிறுவனத்திற்கு முடியுமாகும் என்பதுடன் பிரைம் ஃபைனான்ஸின் சொத்துக்கள் அடிப்படையில் 93% வரையான கடன் கோப்புறை ஊடாக HNB Financeஇன் நிதிச் சேவை அவதானத்தை பலமான நிலை மட்டத்தில் கொண்டு செல்வதுடன் நிறுவனத்தின் இருப்பு பலமடையும்.
இந்த இணைவின் மூலம், HNB FINANCEஇன் நிதிச் சேவைகள், சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதன் சேவைகளை விரிவுபடுத்தவும், அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள மிகவும் திறமையான நிபுணர்களுடன் இணைந்து செயற்படவும், HNB FINANCEஐ நாடு முழுவதும் நிதிச் சேவைகளை வெற்றிகரமாக செயல்படுத்த அதன் சிறந்த திட்டத்தை செயல்படுத்த உதவுகிறது.
