2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி.
தென்னாப்பிரிக்காவில் நடந்துவந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது பரபரப்பான மோதலுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
உலகக்கோப்பையை வெல்ல 16 அணிகள் போட்டிப்போட்ட நிலையில், சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தின.
விறுவிறுப்பாக நடந்துமுடிந்த அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2 விக்கெட்டுகள் மற்றும் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டியானது தென்னாப்பிரிக்காவின் பெனோனி, வில்லோமூர் பார்க்கில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 253 ஓட்டங்களை இந்திய அணிக்கு நிர் 50 ஓவர்கள் முடிவில் 253 ஓட்டங்களை எடுத்தது ஆஸ்திரேலியா அணி .
254 ஓட்டங்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு எதிராக சிறப்பான வேகப்பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி, இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதனால் இந்திய அணி 174 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.