சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனின் முதல் தவணை அடுத்த இரண்டு வாரங்களில் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் இது ஒரு நாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய உறுதுணையாகும்.