கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கியமான நாடுகளுடன் சாத்தியமான பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்தின் கடனில் முதல் கட்டத்தை அடுத்த வருட முற்பகுதியில் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
” கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் முக்கியமான நாடுகளுடன் பேச்சு கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தப் பேச்சுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன. அந்தவகையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள நிதியுதவியின் முதற்கட்டத் தொகை அடுத்த வருட ஆரம்பத்தில் கிடைக்கவுள்ளது.
இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மேற்படி முதற் கட்டத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் அது அடுத்தவருடத்திற்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்த அவர், தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.