” IMF ஐ நாடுவது தவறு கிடையாது” – சஜித்

” நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சீர்செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தைவிட்டால் வேறு வழியில்லை. எனவே, சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை நாம் எதிர்க்கவில்லை. எனினும், உரிய வகையில் கொடுக்கல் – வாங்கல் இடம்பெறாமை குறித்து எமக்கு விமர்சனம் உள்ளது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கு சிலர் (தேசிய மக்கள் சக்தி) முற்படுகின்றனர். ஆனால் அவர்களிடம் திட்டம் இல்லை. நாடு தற்போது உள்ள நிலையில் இருந்து மீள்வதற்கு வழியென்ன? சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதைவிட வேறு வழியில்லை. மாற்று திட்டமும் இல்லை.” எனவும் சஜித் குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles