சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் தேசிய மக்கள் சக்தி இன்று 14 ஆம் திகதி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது என்று அக்கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவை நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ ரணில் விக்கிரமசிங்கவுடன் சென்று சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்த வேண்டிய தேவைப்பாடு எமக்கு கிடையாது. சர்வதேச நாணய நிதியத்துக்கு கூற வேண்டியவற்றை நாம் நேரில் கூறிவிட்டோம்.
எதிர்காலத்தில் மேலும் சில விடயங்களை கூறவும் உத்தேசித்துள்ளோம். 14 ஆம் திகதி சந்திப்போம். அப்போதும் இது பற்றி எடுத்துரைப்போம். எனவே, ரணில் விக்கிரமசிங்க எமக்கு தூதுசெல்ல வேண்டியதில்லை. நாம் பேச்சு நடத்த சந்தர்ப்பமும் கோரவில்லை.” எனவும் சுனில் ஹந்துனெத்தி குறிப்பிட்டார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும் இவ்வாரம் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளது.