படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று ஊடகவியலாளர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே, ஊடக பிரதி அமைச்சரின் கருத்தரங்கை புறக்கணித்து, யாழ். ஊடக மையத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.










