குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு மண்மேடு சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடை பட்டிருந்தது. இந்நிலையில், சரிந்த மண்மேடு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வீதியில் போக்குவரத்து தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குயில்வத்தை பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலையகப் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு, மண்மேடு சரிவு மற்றும் நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இதனால், பாதிக்கப்பட்ட வீதிகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை, அந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நானுஓயா நிருபர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles