லங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர்பில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணியை, கொழும்பு கிங்ஸ் அணி சுப்பர் ஓவரில் தோற்கடித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவர் மெத்யூஸ் முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தார்.
இதன்படி, துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி டஸ்கர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள், சிறப்பான துவக்கத்தை வழங்கினார்கள். இருவரும் 75 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். மென்டிஸ், குணவர்தன ஆகியோரும் தலா 30,30 ஓட்டங்களைப் பெற்றனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் கண்டி அணி 3 விக்கட்டுக்களை
இழந்து 219 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் 220 என்ற வெற்றியிலக்கை நோக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணிக்கு சந்திமால் சிறப்பான ஆரம்பத்தை வழங்கினார். அவர் 46 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பெற்றார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரஷல் 24 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனால் கொழும்பு அணி தோற்றுவிடும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆனால் இறுதி நேரத்தல் இசுரு உதான விஸ்பருபமெடுத்தார். 12 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து கொழும்பு அணியும் 219 ஓட்டங்களை பெற்றதால்போட்டி சமநிலையானது .
இதனால் சுப்பர் ஓவர்மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 1 விக்கட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றது.
பிறகு 17 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணியால் 12 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. ஆட்டநாயகனாக தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டார்.