லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு கிங்ஸ் , ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி, முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஒவர்கள் 4 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. இனவ்னஸ் 65 பந்துகளில் 108 ஓட்டங்களையும், ரசல் 21 ஓட்டங்களையும், மெத்யூஸ் 15 ஓட்டங்களையும் பெற்றனர். லக்மால், அசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்வீதம் கைப்பற்றினர்.
பின்னர் 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களைப்பெற்று தோல்வி கண்டது.
ஜப்னா அணி சார்பாக அசலங்க 32 ஓட்டங்களையும், சொயிப் மாலிக் 29 ஓட்டங்களையும் பெற்றனர். ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சதமடித்த இவனஸ் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் எல்.பி.எல். தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதமும் இதுவாகும்.