LPL போட்டியில் பங்கேற்கவந்த வெளிநாட்டு வீரருக்கு கொரோனா!

லங்கா பிறிமியர் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று இலங்கை வந்த, கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ரவீந்தர்பால் சிங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் அண்ட்ரு ரஸ்ஸல் மற்றும் சிலருடன் கனேடிய கிரிக்கெட் வீரரான ரவிந்தர்பால் சிங் நேற்று இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து  ரவிந்தர்பால் சிங் ஹம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளார்.

 

Related Articles

Latest Articles