மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

“மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது.

சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார்.

மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து மொட்டு கட்சியினர் திரண்டிருந்தனர். இதன்போதே மனோஜ் கமகே மேற்கண்டவாறு கூறினார்.

“ மே மாதம் என்பது பிரபாகரனின் கதையை முடித்த மாதமாகும். அதனால்தான் இந்த மாதத்தை குறிவைத்துள்ளனர். பிரபாகரனின் ஆத்மாவை சாந்தியடைய வைக்க ஆளுந்தரப்பு முயற்சிக்கின்றது.

மஹிந்த ராஜபக்ச என்பவர் சிங்கம். பொய்யுரைப்பவர் அல்லர். குகைக்குள் அவர் ஓடி ஒளியவில்லை. வந்து வாக்குமூலம் வழங்கிவிட்டு சென்றார்.

திறைசேரியில் கொள்ளை அடித்தவர்கள், நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்டோரையும் இவ்வாறு அழைத்து வந்து விசாரிக்கவும்.

மஹிந்த ராஜபக்ச என்பவர் இந்நாட்டு அரசியல் கலாசாரம். அவர்மீது கைவைத்தால் அழிவுதான் ஏற்படும்.” – எனவும் அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles